ஈழவள நாட்டின் மணியாய் திகளும் யாழ் மாவட்டத்தில் வந்தாரை வாழவைக்கும் தென்மராட்சி பகுதியில் கச்சாய் வீதி முதலாம் ஒழுங்கை கொடிகாலத்தில் கந்தையா பொன்னம்மா தம்பதியினருக்கு மகனாக 27.12.1954 இல் இவ்வுலகில் அவதரித்தார்.

இவர் ஆறு ஆண் சகோதரர்களையும், மூன்று பெண் சகோதரிகளையும் உடன் பிறப்பாகக் கொண்டு செல்லமாக வாழ்ந்து வந்தார்.

இவர்களின் பெண் சகோதரியான அமரர் கமலம் காலமாகிய அதனால் மற்றைய வென்வருடன் சந்தோஷமாக வாழ்ந்து கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் கல்வி பயின்று வந்தார்.

க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பொறுப்பேற்றினை பெற்றிருந்தும் உயர் படிப்பை மேற்கொள்ளாது தந்தையாருடன் சுய தொழிலை மேற்கொண்டு வந்த நாளில் தனது 26 வது வயதில் வடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த மாணிக்கம் பத்தினி தம்பதியினரின் மூத்த மகளாகிய செல்வராணியை 1980 ஆம் ஆண்டு திருமணம் செய்து சிறப்பாக வாழ்ந்து ஒரு ஆண் பிள்ளைகளையும் நான்கு பெண் பிள்ளைகளையும் பெற்றெடுத்தார்.

அவர்களில் ஒரு ஆண் பிள்ளையையும் ஒரு பிள்ளையும் அமரத்துவம் ஆகியதால் மூன்று பெண் பிள்ளைகளையும் கல்வியிலும் ஒழுக்கத்திலும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார்.

மூத்த மகளான தர்சினியை மட்டுவிலைச் சேர்ந்த வீரபாகுவின் மகனாகிய ரவிக்குமாருக்கு மணம் செய்து கொடுத்து அவர் ஜெர்மனியில் இரண்டு பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்.

இரண்டாவது மகளாகிய குமுதினியை பட்டதாரியாக்கியதோடு அவர் அபிவிருத்தி உத்தியோகத்தராக அரசு சேவையில் இணைந்து முல்லைத்தீவு வற்றாப்பளையைச் சேர்ந்த வடிவேலு தம்பதியினரின் மகனாகிய அதிபர் சேவையாற்றும் ஜெயகாந்த் என்பவருக்கு மணம் முடித்து ஒரு பெண் குழந்தையுடன் வற்றாப்பளையில் வாழ்ந்து வருகின்றார்.

மூன்றாவது மகளான யாழினி (சுவர்ணா) உயர் தரம் கற்றதன் பின்னர் தென்மராட்சி பலநோக்கு கூட்டுறவு சங்க கிளை முகாமையாளராக கடமை ஆற்றி வருகின்றார்.

இவ்வாறு தனது அயராத உழைப்பினால் மூன்று பிள்ளைகளையும் உயர்நிலையை அடையச் செய்து, வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்து இன்புற்றிருந்த வேளையில் திடீரென 20.04.2023 அன்று மாலை வேளையில் மண்ணுலகத்தை விட்டு விண்ணுலகம் அடைந்து இறையடி சேர்ந்தார்.

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *