திரு,திருமதி கந்தையா, தெய்வானை தம்பதியினருக்கு ஏகபுத்திரனாக 1927.02.29 திகதி அன்று பூமியில் பிரசன்னம் ஆனவர் அமரர் கந்தையா வேலுப்பிள்ளை அவர்கள்.
இவர் சாவகச்சேரி தொகுதியில் வரணி வடக்கை பிறப்படமாகவும் வதிவிடமாகவும் கொண்டவர்.
இவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட திண்ணை பாடசாலை ஆன யா/சைவ பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வி தொடக்கம் J/C என்று சொல்லப்படும் எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்று சித்தி அடைந்ததுடன் சிவில் நிர்வாக பிரிவில் (பொலீஸ்) வேலை வாய்ப்பு கிடைத்தது.
எனினும் தந்தை, தாய்க்கு ஒரே புதல்வன் ஆதலால் வேறு பிரதேசம் செல்ல அனுமதி கிடைக்காததால் ஊரிலேயே விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார்.
இக் காலப் பகுதியில் அதே ஊரைச் சேர்ந்த பெண்ணான முருகர் சின்னபிள்ளையை திருமணம் முடித்து இனிதே இல்லறம் நடத்தியதில் ஐந்து புத்திரர்களையும் இரு புத்திரிகளையும் பெற்றெடுத்து இருவரும் சேர்ந்து பிள்ளைகள் அனைவரையும் கல்வி சேவைகளில் சிறக்க செய்தனர்.
இவ்வாறு இருக்கையில் 2001 ஆம் ஆண்டு ஏழாம் மாதம் 30 ஆம் தேதி வேற பிள்ளை சின்னப்பிள்ளை அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
அதன் பின்னர் கந்தையா வேலுப்பிள்ளை அவர்கள் இளைய மகனுடனும் இளைய மகளுடன் வாழ்ந்து வரும் காலத்தில் 2015 ஆம் ஆண்டு முதலாம் மாதம் ஐந்தாம் நாள் சிவ மதம் அடைந்தார்.
