இலங்கையின் சுதந்திர தினத்தில் கறுப்புக்கொடிகளுடன் தமிழர் சமூகம்.

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினமான இன்றய நாளினை கறுப்பு தினமாக அனுஷ்டிக்கக் கோரி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகம் விடுத்த கோரிக்கையினை ஏற்று கிளிநொச்சி மற்றும் திருக்கோணமலை மாவட்டங்களில் பெருமெடுப்பிலாக ஒன்று திரண்ட மக்கள் தலையில் கறுப்புத் துண்டுகள் கட்டியவாறு கோசங்கள் முழங்க தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். குறித்த எதிர்ப்பு போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் முன்னாள் வடமாகான சபை முதல்வர் சீ.வீ.விக்னேஸ்வரன் உட்பட பல அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
திருக்கோணமலை நகரின் உவர்மலை சந்தியில் ஒன்றுதிரண்ட மக்கள் தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தி பதாதைகளை ஏந்திய வண்ணம் அமைதியான முறையில் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர் இதேவேளை கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் கூடிய மக்களும் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்காத வண்ணம் தங்களுடைய எதிர்ப்பினை வெளிக்காட்டியிருந்தனர்.
ஆரம்ப காலம் தொட்டு தமிழர் சமூகம் இலங்கையின் சுதந்திர தினத்திற்கான தங்களுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருவதோடு நிரந்தர தீர்வுமின்றி நிலையான அபிவிருத்தியுமின்றி ஒரு அர்த்தமற்ற நாளாக இந்நாளினை கொண்டாடுவதை தவிர்த்து வரும் இவ்வேளையில் மக்களின் குறைதீர்க்கும் பொறுப்புவாய்த தமிழ் அரசியல் தலைமைகள் இன்றைய கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்பதென்பது தமிழ்மக்கள் அவர்கள்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையினை சிதறடிப்பதாகவே பார்க்க முடிகின்றது.

2019-02-04

tpsk;guq;fs;

ghu;itahsu;fs;

0000001338

Suvadukal Thamilar Amayam

Email: info@suvadukal.com

FB: suvadukal.tamil@gmail.com

Call: +94 76 441 7009 / +94 76 441 7008 / +94 77 734 6999

News update: +94 75 041 0911

Suvadukal Thamilar Amayam © All rights reserved
Design & developed by NSystemNetworks