பிரான்ஸில் இருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முயன்ற நிலையில் நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நாடு கடத்தப்பட்டவர்கள் நேற்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 8 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபர்களுடன் இருந்த சிறுவர்கள் அனைவரையும் விடுவிப்பதாக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 24ம் திகதி பிரான்ஸ் நாட்டின் ரீயூனியன் தீவிற்கு செல்ல முயற்சித்த 70 பேர் சிலாபத்தில் இருந்து தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர்.

குறித்த இலங்கையர்கள் கடந்த 4ஆம் திகதி பிரான்ஸ் நாட்டை நெருங்கினார்கள். அவர்களுடன் 8 மாத குழந்தைகள் உட்பட 5 சிறுவர்கள் மற்றும் 8 பெண்களும் பயணித்திருந்தனர்.

70 பேரில் 6 பேரின் புகலிட கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், 64 பேர் பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.

இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2019-02-17

tpsk;guq;fs;

ghu;itahsu;fs;

0000001786

Suvadukal Thamilar Amayam

Email: info@suvadukal.com

FB: suvadukal.tamil@gmail.com

Call: +94 76 441 7009 / +94 76 441 7008 / +94 77 734 6999

News update: +94 75 041 0911

Suvadukal Thamilar Amayam © All rights reserved
Design & developed by NSystemNetworks