அகதிகளாக சென்ற தமிழர்கள் தாயகம் திரும்பவுள்ளனர்

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிக அலுவலக வசதிப்படுத்தலுடன் யுத்தகாலத்தில் தமிழ் நாட்டுக்கு அகதிகளாக சென்றவர்களில் 16 குடும்பங்களைச்சேர்ந்த 34 பேர் சுய விருப்பின் பேரில் எதிர்வரும்14ம் திகதி தாயகம் திரும்பவுள்ளனர். இவர்களுள் 15 ஆண்களும் 19 பெண்களும் அடங்குவர்.
இவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருக்கோணமலை போன்ற மாவட்டங்களுக்கு செல்லவுள்ளனர் என தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வால்வளிப்பு, வடமாகான அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.
இவர்களுக்கான இலவசப் பயணச்சீட்டு, ஒன்றிணைத்தல் மாநியக்கொடுப்பனவாக வயது வந்தவர்களுக்கு 10,000 ரூபாவும், வயது குறைந்தவர்களுக்கு 5,000 ரூபாவும், போக்குவரத்து கொடுப்பனவாக 2,500 ரூபாவும், உணவு அல்லாத மானிய கொடுப்பனவாக தனி நபருக்கு 5,000 ரூபாவும், குடும்பத்திற்கு 10,000 ரூபாவும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிக அலுவலகத்தினால் வழங்கப்படுகின்றது.

2019-02-03

tpsk;guq;fs;

ghu;itahsu;fs;

0000005030

Suvadukal Thamilar Amayam

Email: info@suvadukal.com

FB: suvadukal.tamil@gmail.com

Call: +94 76 441 7009 / +94 76 441 7008 / +94 77 734 6999

News update: +94 75 041 0911

Suvadukal Thamilar Amayam © All rights reserved
Design & developed by NSystemNetworks