நோர்வேயில் இருந்து இலங்கை வந்த வேலுப்பிள்ளை கஜேந்திரன் மர்மமான முறையில் கொலை.

வெளிநாடு ஒன்றிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த நோர்வே பிரஜை மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இலங்கையை சுற்றி பார்ப்பதற்காக நோர்வேயில் இருந்து வந்த 53 வயதான வேலுப்பிள்ளை கஜேந்திரன் என்பவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நீர் கொழும்பில் சுற்றுலா விடுதியில் அறை ஒன்றை பெற்று தங்கியிருந்த நிலையில் கடந்த 10-ஆம் திகதி ஹோட்டலில் இருந்து வெளியே சென்ற போதிலும் திரும்பி வரவில்லை, இதனையடுத்து குறித்த நபர் தங்கியிருந்த அறையின் கதவினை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவரது சடலம் விழுந்து கிடந்துள்ளதுடன், குறித்த நபரின் உடலின் பல பகுதிகளில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டுள்ளன.

கஜேந்திரன் மோசமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில் இது குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலுப்பிள்ளை கஜேந்திரன் இலங்கையை பூர்வீகமாக கொண்டுள்ள நிலையில், நோர்வேயில் பிரஜாவுரிமை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2019-02-19

tpsk;guq;fs;

ghu;itahsu;fs;

0000001789

Suvadukal Thamilar Amayam

Email: info@suvadukal.com

FB: suvadukal.tamil@gmail.com

Call: +94 76 441 7009 / +94 76 441 7008 / +94 77 734 6999

News update: +94 75 041 0911

Suvadukal Thamilar Amayam © All rights reserved
Design & developed by NSystemNetworks