மாவீரர் நாள் நினைவுக் கன்றுகளுக்கான கோரல்.

எதிர்வரும் மாவீரர் நாளினை முன்னிட்டு நினைவுக் கன்றுகளுக்கான கோரல் சுவடுகள் தமிழர் அமையத்தினால் முன்வைக்கப்படுகின்றது.

எமது போராட்ட வரலாற்றில் கடந்த காலங்களில் மாவீரர் நாளினை முன்னிட்டு மாவீரர் வாரம் எழுச்சிமிகு வாரமாக அறிவிக்கப்பட்டு குறித்த நாட்களில் பரவலான சிரமதானப் பணிகள்
முன்னெக்கப்படுவதும் பொது இடங்களில் நினைவுக் கன்றுகள் நடப்படுவதும் வழமையாக இடம்பெறுவதோடு மாவீரர் நாளான கார்த்திகை-27 அன்று துயிலுமில்லத்தில் ஏற்றப்படும் தீபங்கள் ஒவ்வொன்றின் அருகிலும் நடுகன்றுகள் வைப்பதும் அதை மாவீரர் நினைவாக எமது மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு கொண்டுசென்று நினைவுக்கன்றுகளாக நட்டு வளர்ப்பதும் தமிழர் வரலாற்று வாழ்வியலோடு கலந்துவிட்ட ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.

ஆயினும் கடந்த மாவீரர்நாள் நிகழ்வுகளின்போது இவ்வாறான மரபு முறையினை செயல்ப்படுத்துவதில் சுவடுகள் தமிழர் அமையம் பெரும் சவாலினை எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதாவது குறித்த நாட்களில் தென்னங்கன்றுகளுக்கு அதிகரிக்கும் கேள்வி மற்றும் விலை அதிகரிப்புகள் திட்டமிடப்பட்ட நிதியிலிருந்து எதிர்பார்த்த அளவிலான கன்றுகளை கொள்வனவு செய்யமுடியாமல் போய்விடுகின்றது.

இதனை பட்டறிவாக எடுத்துக்கொண்டு எதிர்வரும் மாவீரர் நாளிற்கான நினைவுக்கன்றுகளை கொள்வனவு செய்வதற்கு கார்த்திகை மாதம் வரை காத்திருக்காமல் பங்குனி மாதமளவில் நாற்று தேங்காய்களை கொள்வனவு செய்து அதை விதைத்து அதன்மூலப் பெறப்படும் கன்றுகளை இம்முறை மாவீரர் நாள் நிகழ்வில் பயன்படுத்த முடியும் என திட்டமிட்டுள்ளோம்.

இதற்கான நாற்றுத்தேங்காய்களை கொள்வனவு செய்வதற்கான கோரல் சுவடுகள் தமிழர் அமையத்தினால் முன்வைக்கப்படுகின்றது.
இச்செய்தி அறிந்த தனவந்தர்கள் தாமாக முன்வந்து குறித்த பணியினை செய்துமுடிப்பதற்கான தங்களுடைய பேராதரவினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்பு கொள்ள விரும்புவோர் எமது இணையதள தொடர்பு முகவரிகளை கையாளவும்.

2019-02-20

tpsk;guq;fs;

ghu;itahsu;fs;

0000005034

Suvadukal Thamilar Amayam

Email: info@suvadukal.com

FB: suvadukal.tamil@gmail.com

Call: +94 76 441 7009 / +94 76 441 7008 / +94 77 734 6999

News update: +94 75 041 0911

Suvadukal Thamilar Amayam © All rights reserved
Design & developed by NSystemNetworks